தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 6 ஒருநாள் போட்டிகளுக்கான தடை மேன்முறையீட்டை கையளித்துள்ளார்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக்க தமக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 6 ஒருநாள் போட்டிகளுக்கான தடைக்கு எதிராக மேன்முறையீட்டை கையளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கு அவர் இன்று முற்பகல் தமது மேன்முறையீட்டை கையளித்தார்.

அண்மையில் இடம்பெற்ற இந்திய அணியுடனான தொடரின் போது ஒழுக்க மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்ரீலங்கா கிரிக்கட் அவருக்கு எதிராக 6 ஒரு நாள் போட்டித் தடை விதித்திருந்தது.

இதன் காரணமாக தனுஸ்க குணத்திலக்க பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் தெரிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.