தனுஸ்க குணதிலக்கவுக்கு போட்டித் தடை 

தனுஸ்க குணதிலக்க

தனுஸ்க குணதிலக்க இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக்கவுக்கு 6 ஒருநாள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்திய அணியுடனான தொடரின் போது ஒழுக்க விதிகளை மீறிய வகையில் செயற்பட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா கிரிக்கட் அவருக்கு இந்த தடையை விதித்துள்ளது.

இதன் காரணமாக தனுஸ்க குணதிலக்க, பாகிஸ்தானுடன் இடம்பெறும் ஒருநாள் போட்டிக்காக குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.