தனுஸுக்கு நல்ல மனைவியாக இருப்பேன்-அமலாபால்

இயக்குனர் விஜய்யிடம் இருந்து அமலாபால் பிரிவதற்கு தனுஷ்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் விஐபி 2′ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், ‘முதல் பாகத்தில் எனது கேரக்டரை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் தனுஷூக்கு நன்றி.

வேலையில்லா பட்டாதாரி 2ம் பாகத்த்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘விஐபி’ 3ஆம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த பேச்சின்மூலம் அமலாபால் இந்த படத்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கின்றார் என்ற சஸ்பென்ஸ் வெளியே தெரிந்துவிட்டது.

மேலும் இந்த படத்தின் 3ஆம் பாகமும் வெளிவர வாய்ப்பு உள்ளது என்பதும் தெரிந்துள்ளது. மேலும் தனுஷ் மீத் அவருக்கு உள்ள ஈர்ப்பை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.