நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான “ப.பாண்டி” (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டின். நட்பு தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி நடித்துள்ளனர்.

தனுஷ் இயக்கத்தில் உருவான

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – தனுஷ்,ஒளிப்பதிவு – ரா.வேல்ராஜ், இசை – ஷான் ரோல்டான், பாடல்கள் – தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா, நடனம் – பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – சில்வா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.

தனுஷ் இயக்கத்தில் உருவான

படத்தின் முன்னோட்டங்கள் மற்றும் படத்தின் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் உருவான

சென்னையில் இன்று இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது, படம் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  நடிகர் ராஜ்கிரணை, தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. இன்று அவர் மகன் தனுஷ், ராஜ்கிரணை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ப.பாண்டி ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று வெளியாகவுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் உருவான

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]