தனுஷை பற்றி ஹ்ருத்திக் ரோஷன் என்ன சொல்கிறார் தெரியுமா?

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஹ்ருத்திக் ரோஷனிடம், தனுஷின் பாலிவூட் பிரவேசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
hrithink roshan
அதற்கு பதிலளித்த ஹ்ருத்திக் ரோஷன், தனுஷ், தனக்கு மிகப்பெரிய எடுத்துக் காட்டாக இருப்பதாகவும், அவர் ஒரு படத்திற்காக செய்யும் பணிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில், ஒரு நடிகரையோ அல்லது, அவர்களுடன் பணி புரியும் ஒரு தொழில்நுட்ப பணியாளரையோ அது யாராக இருந்தாலும், அவர் செய்யும் வேலையை பார்த்து அல்லாமல், அவர் எவ்வளவு சிறப்பாக அந்த வேலையை செய்தார் என்பதை பார்த்து தான் மதிப்பு கொடுக்கிறார்கள். அது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனவும் அதற்கு தான் மதிப்பளிப்பதாகவும் ஹ்ருத்திக் ரோஷன் தெரிவித்தார்.
dhanush