தனுஷை இயக்கும் பா.ரஞ்சித்

அடுத்து ரஜினியின் படத்தை ரஞ்சித் இயக்குவாரா!! என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ரஞ்சித்திற்கு தூது விட்டிருக்கிறார் தனுஷ்.

அதாவது தனுஷிற்கு இரஞ்சித்தின் இயக்கம் பிடித்து போக, தான் நடிப்பதற்கும் ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிப்பதற்கு சூர்யா நீண்ட காலமாக காத்திருக்கிறார்.

ரஞ்சித் தொடர்ந்து ரஜினியின் இரண்டு படங்களை இயக்கியதால் சூர்யாவை காத்திருக்க வைத்திருந்தார். எனவே அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு பின்னர் தனுசை வைத்து இயக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம்.

தனுஷை வைத்து எடுக்கும் படமும் கூடுதலாக அரசியல் கலவை சார்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ரஞ்சித்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]