தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் மாரி 2

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் மாரி 2

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான மாரி படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் இயக்குனர் பாலாஜி மோகன் மாரி 2 படத்தின் அறிவிப்பு பற்றி அதிகார பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் பாலாஜி மோகன் வெளியிட்டிருந்தார்.

இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்ன்ன ஆகியோர் கலந்து கொண்டனர். மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு அமைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மாரி2 படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்க உள்ளது.


நடிகர்கள் :

1. தனுஷ்
2. சாய் பல்லவி
3. கிருஷ்ணா
4. டோவினா தாமஸ்​​
5. வரலெஷ்மி சரத்குமார்
6. ரோபோ சங்கர்
7. வினோத்
8. அஜய் கோஷ்

தொழில் நுட்பக்குழு :

எழுத்து, இயக்கம் :
பாலாஜி மோகன்
இசை :
யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு :
ஓம் பிரகாஷ்
எடிட்டிங் :
பிரன்னா ஜி.கே
ஆடை வடிவமைப்பு :
வாசுகி பாஸ்கர்
சண்டை பயிற்சி :
சில்வா
தயாரிப்பு மேற்பார்வை :
எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின்
நிர்வாக தயாரிப்பு :
எஸ். வினோத் குமார்
தயாரிப்பு : வுண்டர்பார் பிலிம்ஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]