தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு படு மாஸ்ஸாக நடனம் ஆடிய ஆர்யா, சயீஷா- வீடியோ உள்ளே

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. ‘பட்டியல்’, ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘வேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார். தமிழில் ‘வனமகன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களில் நடித்தவர் சயிஷா சைகல்.

‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஆர்யாவுக்கும் சயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று ட்விட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். மேலும், தங்களுடைய திருமணம் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி மாலை ஆர்யா – சயிஷாவின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 10) நடந்த திருமண நிகழ்ச்சியிலும் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்தத் திருமணத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மார்ச் 14-ம் தேதி சென்னையில் ஆர்யா – சயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]