தனுஷின் பார்வையானது மலையாள சினிமா பக்கம் திரும்பியதற்கான காரணம் தெரியுமா?

தனுஷின் பார்வையானது மலையாள சினிமா பக்கம் திரும்பியதற்கான காரணம் தெரியுமா?

என்னதான் தனுஷை பற்றிய வதந்திகள் வந்தாலும் அவருக்கென்ற ஒரு நல்ல பழக்கம் உள்ளது. அதாவது அவருக்கு ஒருத்தரைப் பிடித்திருந்தால், அவருக்கு உதவி செய்வார். எவ்வாறென்றால் அந்நடிகரை உயர்த்திவிடுவதே அவரின் நற்குணம்.

தனுஷின்

தொலைக்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த சிவகார்த்திகேயனை தனது ‘3’ படத்தில் அறிமுகப்படுத்தியதோடு அவரை வைத்து தொடர்ந்து படங்களும் தயாரித்து அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் தனுஷ்.

இப்போது தனுஷின் பார்வையானது மலையாள சினிமா பக்கம் திரும்பியுள்ளது. அதாவது மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் பக்கம்தான் தனுஷின் பார்வை திரும்பியுள்ளது. முதன்முதலாக தான் மலையாளத்தில் தயாரிக்கும் ‘தரங்கம்’ படத்தில் டொவினோ தாமஸை ஹீரோவாக ஒப்பந்தம் செய்ததோடு இல்லாமல் அவர் தயாரிக்கும் இரண்டாவது படமான ‘மரடோனா’ படத்திலும் அவரையே ஹீரோவாக்கி உள்ளார்.

தனுஷின்

 

அக்டோபரில் தொடங்கும் ‘மாரி 2’ படத்தை பாலாஜி மோகன் இயக்க, தனுஷ் தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சாய்பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தனுஷின்

இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தனுஷின்

இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள ‘மாரி-2’ படத்தில் டொவினோ தாமஸை வில்லனாகவே நடிக்க வைத்துள்ளார் தனுஷ். மலையாள நடிகர்கள் தமிழில் ஒரு இடத்தை பிடிக்க துடிக்கும் இந்த வேளையில், தமிழில் எளிதாக கால் பதிக்க வாய்ப்பாக கிடைத்துள்ள தனுஷின் அன்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டாராம் டொவினோ தாமஸ்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]