தனியார் மருத்துவமனையால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!!

வவுனியா வைத்தியசாலையில் ஒன்பது மாத குழந்தை பரிதாபமாக பலி

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது வவுனியா காமினி மகாவித்தியாலயத்தடியை சேர்ந்த(சிங்கள தெற்கு பிரதேச செயலகம் முன்பாக) இளம் குடும்பத்தினரின் ஒன்பது மாத ஆண் குழந்தை சுகவீனம் காரணமாக நேற்று காலை வவுனியா நகரில் ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அங்கு வழங்கப்பட்ட பாணி மருந்தை நேற்று இரண்டு தடவை குழந்தைக்கு வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து குழந்தைக்கு அதிக வயிற்றோட்டம் ஏற்பட்டு மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றதும் அங்கிருக்கும் வைத்தியர் தனது கடிதம் ஒன்றுடன் வவுனியா பொதுவைத்திய சாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

பொதுவைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு சென்றதும் வைத்தியர்கள் இரத்தப் பரிசோதனை செய்தவுடன் சிகிச்சை வழங்கியும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணித்துள்ளது.

தனியார் மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருந்தை பொதுவைத்தியசாலை வைத்தியர்களால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இச்சம்பவத்தை போன்றே இதே குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குழந்தை ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]