தனியார் பேருந்து விபத்து- 8பேர் காயம்!!

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் சுற்றுமதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து ஓட்டுனருக்கு நித்திரை சென்றுள்ளமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]