தனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளரொருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியின்  விளக்கமறியில் எதிர்வரும் 27ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (13) ஆஜர்செய்தனர்.

31.01.2019 அன்று காலை அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டி மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை முந்திச்சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் செங்கலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கந்தக்குட்டி கோமலேஸ்வரன் (வயது 50) ஸ்தலத்திலே உயிரிழந்தார்.

குறித்த வளக்கு மீதான விசாரணை ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]