தனியார் துறை மற்றும் அரச நிறுவன பணியாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

மே மாதம் 7 ஆம் திகதியில் தொழிலாளர் தினம் கொண்டாடுவதன் பொருட்டு அன்றையதினத்தை விடுமுறையாக தினமாக அறிவிப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியா அல்லது 7ஆம் திகதியா கொண்டாடுவது என சமூக வலையத்தளங்களில் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெறுவது தொடர்பில் தொழில் ஆணையாளரிடம் வினவியபோது….

வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், மே 7 ஆம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் படி தனியார் துறை மற்றும் அரச நிறுவன பணியாளர்களுக்கு மே 7ஆம் திகதியே விடுமுறை தினமாக அறிவிக்க முடியும் என தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]