தனியார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை தகவல்!!

போதைக்கு அடி­மை­யா­கி­யுள்ள பாடசாலை மாண­வர்­களில் அநேகமானவர்கள் நக­ரங்­களை அண்மித்த தனியார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு செல்­ப­வர்கள் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நக­ரங்­களை அண்­மித்த கல்வி நிலை­யங்­க­ளுக்கு வரும் பாட­சாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவ­னைக்கு இரை­யாக்­கப்­ப­டு­வ­தாகவும் நக­ரங்­களில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரும் வியா­பா­ரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இத்தகவலை தெரி­விக்­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி, குரு­விட்ட, பெல்­ம­துளை, எஹலிய­கொடை, காவத்தை ஆகிய நகர பிர­தே­சங்­களில் இந்நிலைமை பார­தூ­ர­மாக காண­மு­டி­வ­தாக இவர்கள் தெரிவிக்­கின்­றனர்.

குறிப்­பாக வார இறுதி, மாலை­நேர விசேட வகுப்­புக்கள் மற்றும் பிரத்­தி­யேக வகுப்­புக்­க­ளுக்குச் வரும் மாணவர்­க­ளிடம் மாத்­தி­ர­மன்றி தற்­போது பாட­சாலை மாண­வர்கள் மத்­தி­யிலும் போதைப் பொருள்­பா­வனை அதி­க­ரித்து வரு­வது உண­ரப்­பட்­டுள்­ளது.

போதைப் பொருட்­களை இல­கு­வாக சந்­தைப்­படுத்தவும் பணத்தை இல­கு­வாக பெற்றுக்கொள்ளவும் இல­கு­வான பிரி­வி­ன­ராக இளம் பராய மாண­வர்கள் காணப்­ப­டு­வ­தனால் போதைப்பொருள் வியா­பா­ரிகள் இவர்களை துரும்­பாக பயன்­ப­டுத்­து­வ­தாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் காலத்­துக்கு காலம் ஒவ்­வொரு பெயரில் போதைப் பொருள்கள் அறி­முகப்படுத்­தப்­ப­டு­வ­தா­கவும் தற்­போது வெற்­றிலை, பாக்கு, புகை­யிலை, சுண்­ணாம்பு போன்­ற­வற்­றினால் உட­ன­டி­யாக தயா­ரிக்­கப்படும் போதைப்­பொ­ருட்கள் அண்­மைக்­காலமாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் இப்­போதைப் பொருட்களால் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் புற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]