தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு – கட்டுடையில் சம்பவம்

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு – கட்டுடையில் சம்பவம்

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 74 வயது மூதாட்டி இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

“அவரது வீட்டு ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்தன. அதனால் கொள்ளையர்களே மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அத்துடன், சடலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த த.இரத்தினதேவி (வயது -74) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

அவரை மூன்று நாள்களாகக் காணவில்லை என்று அயலவர்கள் இன்று முற்பகல் தேடிச் சென்றுள்ளனர். அதன்போதே மூதாட்டி சடலமாகக் காணப்பட்டுள்ளார். அயலவர்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]