தனிப்பட்ட தகராறொன்றின் காரணமாக துணி துவைக்கும் இயந்திரத்திற்கு தீ வைத்தவர் கைது!!

தனிப்பட்ட தகராறொன்றின் காரணமாக பெண்ணொருவர் பாவித்து வந்த துணி துவைக்கும் இயந்திரத்திற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 27.03.2018 காத்தான்குடி 6 இராசா ஆலிம் வீதியிலுள்ள வீட்டிலிருந்த துணி துவைக்கும் இயந்திரமே தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 45 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.