தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் டெனிஸ்வரன்?

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே கிராமிய அபிவிருத்தி அமைச்சராக இருந்த சமயத்தில் முன்னாள் போராளிகளிற்கு உதவி திட்டம் ஒன்றை ஆரம்பித்து, அவர்களின் பெயர் விபரங்களை திரட்டியிருந்தார்.

இந்த விபரத்தின் அடிப்படையில் முன்னாள் போராளிகளுடன் தொடர்புகொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து கட்சியாக்குவது தொடர்பிலேயே ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகின்றது.

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களினை உள்ளடக்கி கட்சியாக செயற்பட முற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]