தனது தோழியை கரம் பிடித்த இயான் மோர்கன் – புகைப்படங்கள் உள்ளே!

கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் இயான் மோர்கன் – தாரா ரிட்ஜ்வே ஆகியாரின் திருமணம் நடைப்பெற்றது.

இவர்களின் திருமணம் இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பேபிங்டன் ஹவுஸில் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

இவர்களின் திருமண விழாவில் சக அணி வீரர்களான ஜேசன் ராய், அலெஸ்டர் குக், ஸ்டீப் பின், மார்க்வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தனது தொடர்பான புகைப்படத்தை மோர்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘தாரா ரிட்ஜ்வேயுடன் என்ன ஒரு அருமையான நாள்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரிட்ஜ்வே இயான் மோர்கனின் நீண்ட நாள் தோழி என்பது குறிப்பிடத்தக்கது.  இயான் மோர்கன் இயான் மோர்கன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]