தனது ஓய்வை அறிவித்த டென்னீஸ் வீரர் அண்டி மரே!

இந்த வருடம் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக பிரித்தானியாவின் டென்னீஸ் வீரர் அண்டி மரே அறிவித்துள்ளார்.

எனினும் சில வேளைகளில அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரே தமது இறுதி தொடராக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலமாக சிரமப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலிய பகிரங்க தொடரில் கலந்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள மரே, மெல்பேர்னில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, தாம் விம்பில்டன் தொடருடனேயே ஓய்வுப் பெற எத்தனித்திருக்கின்ற போதும், அதுசாத்தியப்படுமா என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

அண்டி மரே மூன்று தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]