தனது ஆடையை கிண்டல் செய்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு- இப்படியா பண்ணுவாங்க!!

நியூயோர்க்கில் உள்ள Cornell பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது ஆய்வறிக்கையை வழங்கிகொண்டிருக்கையில் அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Letitia Chai என்ற அந்த மாணவி 4 நாட்களுக்கு முன்னர் அணிந்து சென்ற ஷார்ட்ஸ் மிகவும் சின்னதாக இருப்பதாக பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராசிரியரின் இந்த கேள்வி மாணவியை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. மாணவிகளின் ஆடையை இவ்வாறு விமர்சிப்பது தவறு என கருதிய இவர், இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதன்படி, தனது ஆய்வறிக்கையை அனைவர் முன்னிலையிலும் வழங்கும் வகுப்பு வந்தது. 50 மாணவர்கள் முன்னிலையில் தனது ஆய்வறிக்கையை வழங்கிகொண்டிருக்கையில், திடீரென தனது ஆடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எனது ஆடையை கிண்டல் செய்த பேராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நான் இவ்வாறு நடந்துகொண்டேன்.

ஆடைகளை எவ்வாறு அணிய வேண்டும் என்பது மாணவிகளின் தனிப்பட்ட கருத்து, இதில் மற்றவர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது என கூறியுள்ளார். என்னைபோன்று மற்ற மாணவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள இந்த மாணவிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]