தந்தை செல்வநாயகத்தின் 41 ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் முத்த தமிழ் அரசியல் வாதியுமான தந்தை செல்வநாயகத்தின் 41 ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

தந்தை செல்வா அறக்காவலர்சபையின் தலைவர் ஓய்வுநிலை பேராயர் ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது தந்தை செல்வா நினைவுச்சிலைக்கு அரசியல் தலைவர்கள் மலர் மாலை அணிவித்ததுடன் சமாதியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் நவசமாயவாய கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரம்பாகு கருணாரட்ண தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அமெரிக்கன் மிசன் பேராயர் டானியல் தியாகராஜா மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]