தந்தை இழந்தும் ஐ.பி.எல் போட்டியில் அரைசதம் விளாசிய ரிஷப் பந்த்

தந்தையை இழந்தும் ஐ.பி.எல் போட்டியில் அரைசதம் விளாசி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், யாதவ் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் 19 வயது இளம் வீரரான ரிஷப் பந்த், 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர் களுடன் 56ஓட்டங்களை விளாசியிருந்தார்.

ரிஷப் பந்த்தின் தந்தையான ராஜேந்திர பந்த், கடந்த செவ்வாய் கிழமையன்று உடல்நலக் குறைவால் காலமாகியிருந்தார். இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக களம் இறங்க வேண்டியுள்ளதால் வியாழனன்று அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு அணியில் சேர்ந்தார் ரிஷப் பந்த்.

தனது முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்ட தந்தையின் மறைவால் ஏற்பட்ட சோகத்தையும் கடந்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பந்த் அரைசதம் அடித்துள்ளார்.

18 ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்த நிலையிலும் உலகக் கோப்பை போட்டியில் கென்யாவுக்கு எதிராக களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கர், அப்போட்டியில் சதம் அடித்தார் என்பது எங்கு நினைவுக் கூற தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]