தந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி – கண்டியில் சம்பவம்

தந்தை இறந்த செய்தி கேட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாத மகள், புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த பல்கலைகழக மாணவியான இவர், கண்டியில் தற்கொலை செய்துள்ளார்.

வவுனியா கற்குளத்தை சொந்த இடமாக கொண்ட, கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு 2ஆம் வருட மாணவி செல்வநாயகம் மதுசா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கற்குளம் 4 ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் இயற்கை எய்தினார்.

இந்தச் செய்தி பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பயிலும் அவரது மகளுக்கு உறவினர்களால் அறிவிக்கப்பட்டது.

அந்தச் செய்தி கேட்ட அவர் உடனடியாக வவுனியா வருவதற்கு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் அங்கிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள யாக்கா பாலத்திற்கு சென்று அங்கு புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து அவர் யாக்கா பாலத்துக்குச் சென்றமை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவியின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]