தந்தையை ஏமாற்றி காதலனுக்கு ஸ்மாட் போன் வாங்கிக் கொடுத்த மாணவி

தனது தந்தையை ஏமாற்றி 20 ஆயிரம் ரூபா பணத்தை தந்தையின் கடன் அட்டையில் (Credit Card) இருந்து பெற்று தனது காதலனுக்கு சிமாட் போன் (Smart Phone) வாங்கிக் கொடுத்துள்ளார் யாழ் பிரபல பாடசாலை மாணவி.

தனது வங்கிக் கணக்கில் திடீரென பெருந்தொகைப் பணம் எடுக்கப்பட்டிருப்பதை உணர்ந்த தந்தை இது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் வினாவியுள்ளார்.

குடும்பத்தவர்கள் இது தொடர்பாக மறுப்புத் தெரிவிக்கவே குடும்பஸ்தர் தனது வங்கியில் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்த போது குறித்த பணம் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏ.ரி.எம்இல் (ATM) எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எடுத்தவரை அறிவதற்கு முயன்ற போது அதற்கு பொலிசாரிடம் முறைப்பாடு செய்து வருமாறு வங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பஸ்தர் பொலிசாரிடம் முறைப்படாடு செய்துள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் குறித்த ஏ..ரி.எம் (ATM) இல் பணம் எடுத்துள்ளது குடும்பஸ்தரின் மகளே என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிசார் 17 வயதான மகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பணம் தன்னால் எடுக்கப்பட்டதையும் அப் பணத்தில் சிமாட் போன் (Smart Phone) வாங்கி தனது ஆண் நண்பருக்கு கொடுத்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்ட மாணவியின் காதலனிடம் இருந்து அந்த தொலைபேசி பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]