தந்தையின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த 2வயது குழந்தை!

முச்சக்கர வண்டியில் இருந்து வெளியில் விழுந்த 2 வயதான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் பொலனறுவை அரலகங்வில தலுகான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

முச்சக்கர வண்டி வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, குறித்த குழந்தை யாருக்கும் தெரியாமல் அதில் ஏறியுள்ளது.

இதனை அறியாத அக் குழந்தையின் தந்தை முச்சக்கர வண்டியை இயக்கிய போது, குழந்தை தவறிவிழுந்து படுகாயம் அடைந்த நிலையில், நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலன் இன்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகள் குறித்து பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]