தந்தையாக விருப்பமா? ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?

பெண் மட்டும் குழந்தை பிறக்க முழுமையான காரணமாக இருப்பதில்லை. ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற ஆண்களும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆண்களின் உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

1. உடல் எடையை குறைத்தல்

பெண்கள் சரியான உடல் எடையுடன் இருந்தாலும், ஆண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். உடல் எடை அதிகமாக உள்ள ஆண்களின் விந்துணுக்களின் சக்தி குறைவாக இருக்கும். எனவே உயரத்திற்கேற்ற உடல் எடையை வைத்துக்கொள்ளுங்கள்.

2. ஆரோக்கியம்

சில ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சக்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இவை கருவுருதலை பாதிக்கலாம். கேன்சருக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் நிரந்தர கருவுறாமை பிரச்சனையை உருவாக்கும். எனவே ஆண்களின் கருவுறும் தன்மையை பாதிக்காத மருந்துகளை பரிந்துரைக்குமாறு மருத்துவரை கேட்கலாம்.

3. சத்துள்ள உணவுகள்

பெண்களை போலவே குழந்தை ஆரோக்கியமாக பிறக்க ஆண்களும் சத்தான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்த உணவானது விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

4. உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது ஆண்களின் மனநிலையை சமநிலையில் வைக்கவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடற்பயிற்சி ஆண்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பைக் ரைடர்களுக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் காரணமாக கருவுறும் தன்மை குறைகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் ஐந்து மணிநேரம் பைக் ரைட்டிங் மற்றும் சைக்கிளிங் செய்பவர்களுக்கு கருவுறும் தன்மை குறைகிறது என ஆராய்சிகள் கூறுகின்றன.

5. மல்டி விட்டமின்

ஆண்கள் தினசரி அனைத்து விட்டமின்களும் நிறைந்த உணவுகளை உண்பதால் விந்தணுக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆண்டிஆக்சிடண்டுகள், விட்டமின் சி, விட்டமின் ஈ, ஜிங்க், மினரல்கள் போன்றவை விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.


6. வயது சார்ந்த பிரச்சனை

பெண்களை போலவே ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் கருவுறும் தன்மை குறைகிறது. விந்தணுக்களின் சக்தி குறைவாதாக ஆய்வுகள் கூறுகின்றன.

7. தீய பழக்கங்கள்

புகைப்பிடித்தல் மது அருந்துதல் ஆகியவை விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இந்த பிரச்சனை கொண்டவர்களின் உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டை வரை சென்றடைவதில்லை.

8. சூடான நீர்

சூடான நீரில் குளிப்பது, பாத் டப்களில் சூடான நிரை நிரப்பி குளிப்பது ஆகியவை விந்தணுக்களின் ஆயுளை குறைக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]