தண்ணீரில் மூழ்கியும் உயிர்பிழைத்த சிறுவன்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரையோரம் அருகே அவிஸ்டா சொகுசு விடுதி உள்ளது. இங்கு, நீச்சல் குளத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தண்ணீரை வெளியேற்றும் ஓட்டையில் இருந்த சல்லடையில் சிறுவனின் கால் சிக்கிக் கொண்டது.

இதனால், அந்த சிறுவன் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. நண்பன் ஆபத்தில் இருப்பதை அறிந்த மற்ற சிறுவன் உதவிக்கு அங்குள்ள பெரியவர்களை அழைத்தான். ஆனால், சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இறுதியாக, 9 நிமிடம் கழித்து சிறுவனை நீருக்கடியில் இருந்து பாதுகாப்பு குழு வெளியேற்றியது. சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருந்த போது அங்கிருந்த ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது வாய் வழியாக காற்றை அந்த சிறுவனுக்கு கொடுத்தபடி இருந்துள்ளார்.

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]