தண்டவாளத்தில் தலையை வைத்ததால் இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீதம்!!

இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தலையை வைத்து இருந்த நிலையில் புகையிரதம் தலைபகுதியில் ஏறிய நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதமே இவ்வாறு தலையில் மேல் ஏறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்திலே இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

புகையிரத ஊழியர்களினால் சடலம் சிலாபம் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞர் யார் என்பதனை அடையாளம் காண்பதற்கு காவற்துறை தற்போது விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவருகின்றது.