தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழுந்துள்ளது. தமிழகத்தின் கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்தியே தீர வேண்டும் என்று தமிழ் அமைப்பினர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதால் கடைசி வரை இதுகுறித்து குழப்பமாகவே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்பு, ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம்மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று ஆவேசமான அறிக்கை ஒன்றை விடுத்தார்.

தற்போது இன்னொரு பிரபல நடிகரும் நடிகர் சங்க துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், ‘நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்’ என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.