தடையின்றி உரத்தை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

தட்டுப்பாடு ஏற்படாமல் தடையின்றி விலைக்கு உரத்தை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு சந்தர்ப்ம் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவாசாய அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, நச்சுப்பொருட்களை பயன்படுத்தாது செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]