தடைசெய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று பிற்பகல் தடைசெய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

நேற்று பிற்பகல் கற்குழி புகையிரதக் கடவைக்கு அருகில் மாமடுவ பகுதியைச் சேர்ந்த 32வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 820கிராம் பொதி செய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட இந் நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் வியாபாரி ஒருவரிடமிருந்து மாவா போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு சென்ற குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தற்போது வவுனியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா, கஞ்சா , போதைப் பாக்குகள் போன்றன தேக்கவத்த, கற்குழி, தோணிக்கல், உள்வட்ட வீதி, பூந்தோட்ட வீதி, பழைய பேருந்து நிலையம், பண்டாரிகுளம், உக்கிளாங்குளம், மறவன்குளம், சுந்தரபுரம், தரணிக்குளம், கல்மடு, புதிய பேருந்து நிலையம், பட்டாணிச்சூர் பாடசாலையை அண்டிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியின் கால் துடைப்பத்தின் கீழும் சூட்சுமமாக மறைத்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]