5வயதுடைய சிறுமியின் உயிரைப்பறித்த தடுப்பூசி- ஊரையே சோகத்தில் சோகத்தில் ஆழ்த்தியது!!

தமிழ்நாடு சென்னை கொடுங்கையூர் காவிரி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவர்களுடைய மகள் தன்ஷிகா (வயது 5). இவள் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் படித்து வந்தாள்.

அம்மை நோய்க்கு தடுப்பூசி போடுவதற்காக தன்ஷிகாவை அவளுடைய பெற்றோர் ஸ்டான்லி அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஊசி போட்ட உடன் உடலில் சில பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து சிறுமி தன்ஷிகாவிற்கு தொடர்ந்து ஸ்டான்லி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் லோகேஸ்வரி கண்ணீர் மல்க, எனது குழந்தைக்கு புது உடை அணிந்து தடுப்பூசி போட அழைத்து வந்தேன். ஆனால் ஊசி போட்ட பிறகு எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தொடர்ந்து ஸ்டான்லி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவள் இறந்துவிட்டாள்.

இதுகுறித்து ஏழுகிணறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தும் உடனடியாக ஏற்காமல் தாமதமாக ஏற்றனர். மேலும் ஸ்டான்லி வைத்தியசாலையில் ஊசி போட்டதற்கான ஆதாரம் உண்டா? என பொலிசார் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

புதிதாக வாங்கப்பட்ட வெளிநாட்டு மருந்தை பரிசோதிப்பதற்காக எனது மகளுக்கு வைத்தியர்கள் போட்டதால்தான் அவர் இறந்து விட்டாள். இது குறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் ஸ்டான்லி வைத்தியசாலையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தன்ஷிகாவின் உடலை ஸ்டான்லி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி, அவளுடைய பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]