தடுப்புக்காவலில் இளைஞன் தற்கொலை: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

மனித உரிமைகள் ஆணைக்குழு

தடுப்புக்காவலில் இருந்த 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் தற்கொலை குறித்த விசாரணைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை (10) இரவு கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து, புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கைதி உயிரிழந்தமை தொடர்பில் சுயாதீன பொறிமுறையின் கீழ் விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]