தடுக்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாப பலி – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இச் சம்பவத்தில் சுளிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் சுளிபுரம் மத்தி சுளிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் கரிகரன் எனும் 8 வயது பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்ற போது அங்கு புத்தகப்பை தடுக்கி கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது மயக்கமடைந்ததால் பாடசாலை ஆசிரியர்கள் குறித்த மாணவனை உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சிறுவன் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் போதே வழியில் உயிரிழந்து விட்டதாக சங்கானை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மாணவனது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் மாணவனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]