தசநாயக்க உள்ளிட்டவர்களின் மனு மீது நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் 09 பேருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதை நீக்க முடியாது என, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அவ்வாறு உத்தரவிடக் கோரி பிரதிவாதிகள் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) தள்ளுபடி செய்துள்ளது.

இதற்கான உத்தரவை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி லங்கா ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2008ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 08ஆவது மற்றும் 09ஆவது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சந்தேகநபர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், தற்போது பிணையில் விடுதலையாகியுள்ள முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]