தங்க பிஸ்கட்டுகளுடன் பெண் கைது

24 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 தங்க பிஸ்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க பணடாரநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த கண்டி, பேராதெனிய பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மூலம் கொண்டுவரப்பட்ட 100 கிராம் நிறையுடைய 4 தங்க பிஸ்கட்டுக்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக சுங்கப்பிரிவின் பதில் ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.