தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது

இலங்கை பிரஜைகள் இருவர்

தங்க பிஸ்கட்டுகளுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த இலங்கை பிரஜைகள் இரண்டு பேர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 மற்றும் 43 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார், மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் டுபாயிலிருந்து வந்த இலங்கை விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல்-226 என்ற விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இதனை அவதானித்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிலோ 900 கிராம் நிறையுடை தங்க பிஸ்கட்டுக்களை கைப்பற்றியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]