தங்கொட்டுவ வீதிக்கு பூட்டு

நாத்தாண்டியா – தங்கொட்டுவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் தும்மோதரை பாலமானது, லொறியொன்றுடன் தாழிறங்கியதை அடுத்து அப்பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, குறித்த வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொஸ்வத்தை – மாரவில ஊடாக செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]