தங்குமிடம் இல்லாது தவிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

160 ற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் இலங்கையில் வாழ்விடம் இல்லாது தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி  நடத்தப்பட்ட குண்டுத் தாகுதலை தொடர்ந்து கடந்த மாதம் 24 ஆம் திகதி 60 இற்கும் மேற்பட்டவர்கள் கத்தோலிக்கம் மற்றும் கிறிஸ்தவர்கள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் சன்னி முஸ்லிம்களும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரினர்.  பின்னர் பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் முகவர் ஆணையத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் முகவர் ஆணையத்தின் மூலம் இவர்கள்  இலங்கையில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டவர்களாவர்.

ஐக்கிய நாடுகள் முகவர் ஆணையத்தின் மூலம் பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் உள்ள மூன்று மலசலகூடங்களையும் இரண்டு குளியலரைகளையுமே சகலரும் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பான இடமொன்றில் விரைவில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நகரில் உள்ள வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்த இவர்களை தாகுதல் சம்பவத்திற்கு பின்னர் வீட்டுரிமையாளர்கள் தமது வீடுகளிலிருந்து செல்லுமாறு கூறிய பின்னரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரினரியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]