தங்களுடைய தோழியுடன் பேசியதால் 14 வயது சிறுவனை கொலை செய்த சக சிறுவர்கள்

தங்களுடைய பெண் நண்பியுடன் பேசியதால் சக சிறுவர்கள் 14 வயது சிறுவனை குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் புதுடெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 14 வயது சிறுவன்  பெண் தோழியுடன் பேசியுள்ளான். இந்த விடயம் குறித்த பெண் தோழியின் 4 நண்பர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுவனின் வீட்டிற்கு சென்ற 4 சிறுவர்கள், அவனை வெளியில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, நான்கு சிறுவர்களும் அந்த சிறுவனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

பின்னர் சிறுவனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான். நான்கு சிறுவர்களில் 3 சிறுவர்களை கைது செய்துள்ள பொலிசார் மற்றும் ஒரு சிறுவனை தேடிவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]