தங்கத்துடன் சீன பிரஜை கைது

65 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொங்கொங் நோக்கிய தங்கம் கடத்த முற்பட்ட நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 30 வயதுடைய சீன பிரஜை என்றும், அவரின் பயணப்பொதியில் குறித்த தங்கம் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

25 கரட் தரத்தையுடைய சுமார் 1 கிலோகிராம் தங்கக் கட்டிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]