தங்கச் சங்கிலிக் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு தேடப்படுகின்றனர்

கொள்ளையர்கள்

தங்கச் சங்கிலிக் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு தேடப்படுகின்றனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள ஏறாவூர் நகரக் கடைத் தெருவில் இடம்பெற்ற சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 02.01.2018 அன்று மாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 48 தங்க மோதிரங்களும், 11 தங்கச் சங்கிலிகளும் ஏறாவூர் பிரதான வீதியை அண்டியுள்ள ரேணுகா நகை மாளிகையிலிருந்து அபகரித்துச் செல்லப்பட்டிருந்தன.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விரிவான புலன் விசாரணையில் ஈடுபட்ட ஏறாவூர் பொலிஸார் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களாக மூவரை அடையாளம் கண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவரான கோரகல்லிமடுவைச் சேர்ந்த இராசதுரை சந்திரன் (வயது 28) என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ரேணுகா நகை மாளிகையிலிருந்து அபகரித்துச் செல்லப்பட்டிருந்த தங்க ஆபரணங்களில் 4 தங்கச் சங்கிலிகளும் 3 மோதிரங்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டதோடு சந்தேக நபர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணட்டப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட கோரகல்லிமடு பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இருவர் இன்னமும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகைக் கடை திறந்திருந்தபோது கடைக்கு வந்த நபர் தான் தங்கச் சங்கிலிகளும், மோதிரமும் வாங்கப் போவதாகக் கூறி விதம் விதமான தங்கச் சங்கிலிகளும் மோதிரங்களும் அடங்கிய நகைப் பெட்டியை நகைக் கடை உரிமையாளர் குமாரசாமி குலசேகரனிடமிருந்து அபகரித்துச் சென்றதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்தன் அடிப்படையில் சிசிரீவி காணொளிக் கமெராவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]