தகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்!

தகாத உடல் உறவுகளால் ஆண்களைத் தாக்கும் நோய்கள்!

தகாத உடலுறவு மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவுகளால் ஆண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அத்துடன் ஆண்கள் பாலியல் நோய்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நோய்கள் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையாலும் கூட நம்மைத் தாக்கும்.

ஆதலால் இதைப்பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

எய்ட்ஸ்

தவறான உடல் சேர்க்கையால் உண்டாகும் உயிர்க்கொல்லி நோய் தான் எய்ட்ஸ்.

இந்நோய் உண்டானால் அதிகப்படியான காய்ச்சலும் திடீரென உடல் எடை குறைவதும் உண்டு. இந்நோய் வெளியில் தெரியவே 10 வருடங்கள் ஆகும்.

தகாத உடல் உறவுகளால்

கிளமீடியா பாக்டீரியல் நோய்த்தொற்று

இந்நோய் பரவியுள்ள ஒருவருடன் உறவு கொள்ளும்போது, உண்டாகும். இந்நோய்த்தொற்றால், ஆணுறுப்பில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், விறைப்பை வீக்கம் ஆகியவை உண்டாவது இதன் அறிகுறிகளாகும்

மேகவெட்டை

மேகவட்டை என்பதும் ஒருவகையான பாலியல் நோய். தவறான உடலுறவால் தான் இதுவும் உண்டாகிறது.

பாலியல் நோய்களில் மிக அதிகமாக ஆண்களைத் தாக்கக்கூடியது இந்நோய். இந்நோய் இருந்தால் விறைப்பை வீக்கமும் சிறுநீர் கழிக்கும் போது மஞ்சள் நிறத்திலும் உண்டாகும்.

மேகப்புண்

மேகப்புண் நோய் தகாத உடலுறவால் தான் உண்டாகும். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யவில்லையெனில் கண் பார்வை குறைபாடு, காது கேளாமை உண்டாகும்.

இறுதிக்கட்டத்தில் மூளையை பாதிக்கும் அபாயம் கூட உண்டு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]