ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி இடையே ஏற்பட்ட மோதலால் கடும் அதிர்ச்சிக்குவுள்ளான ரசிகர்கள்….

பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள எல்.கே.ஜி. படம் எதிர் வரும் 22ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி கிடைத்துள்ளது.

இது குறித்து அறிந்த நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதிகாலை காட்சியின் மதிப்பு இழந்து வருகிறது என்று விஸ்ணு டுவிட் செய்திருந்தார். அவர் ட்விட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி பதில் அளிக்க விஷ்ணு மறுபடியும் ட்விட் போட மோதல் முற்றியது.

ஆர்.ஜே. பாலாஜிக்கு பதில் அளித்து விஷ்ணு விஷால் ட்விட் செய்திருப்பதாவது, முதலில் உங்களை சுற்றியுள்ளவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். படங்களில் நடிப்பதற்கு முன்பு என்ன செய்தீர்கள், அப்பொழுது நடிகர்களை எந்த அளவுக்கு மதித்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. உங்கள் உழைப்புக்கு மட்டும் அல்லாமல் அடுத்தவர்களின் கடின உழைப்புக்கும் கிரெடிட் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி பெற மக்களின் சென்டிமென்ட்டை மீண்டும் மீண்டும் நான் பயன்படுத்தவில்லை என்பதில் மகிழ்ச்சி என்கிறார் விஷ்ணு.

இவ்வாறு தொடர்ந்த இவர்களின் மோதல் ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்துள்ளது.
விஷ்ணுவிடம் பேசிவிட்டேன். காலையில் நடந்தது ஒரு வேகத்தில் நடந்துவிட்டது. கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டோம் என்று பாலாஜி ட்விட் செய்துள்ளார். அவர் ட்விட் செய்த வேகத்தில் விஷ்ணு விஷால் எல்.கே.ஜி., பாலாஜியை விமர்சித்து போட்ட ட்விட்டுகளை எல்லாம் நீக்கிவிட்டார்.

ஆர்.ஜே. பாலாஜி பேசியதை அடுத்து அவரை வாழ்த்தி ட்விட் போட்டுள்ளார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் அப்பாவை விமர்சித்து வெளியிட்ட வீடியோவை பாலாஜி நீக்கிவிட்டார். சிறிது நேரத்திற்கு முன்பு வரை மல்லுக்கட்டியவர்கள் தற்போது நண்பர்களாகிவிட்டனர்.

இவர்கள் மோதிக் கொண்ட ட்விட்களில் சில இதோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]