டொனால்ட் டிரம்ப் 100 நாள் ஆட்சி

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்று முதல் நூறு நாட்கள் சலிப்பு தட்டும் விதமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்ததைத் தவிர குறிப்பிடும்படி ஏதுமில்லை.. ஆனால், அவர் கூறிய வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் சத்தமாகவும், உக்கிரமாகவும் மற்றும் அதில் எத்தனை மீது உண்மையான நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

இதோ டிரம்பின் சாதனைகள் மற்றும் சறுக்கல்கள் குறித்த ஓர் விரைவான மீளாய்வு.

மதில்சுவர் திட்டம்

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் மதில்சுவர் கட்டுவது என்பது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரே உறுதிமொழி மட்டுமல்ல, நீண்ட நாளைய உறுதிமொழிகளில் ஒன்றும் கூட. தன்னுடைய தேர்தல் பிரசாரங்களில் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் பிரம்மாண்ட சுவர் கட்டும் திட்டம் பற்றி தொடச்சியாக வேட்பாளர் டிரம்ப் பேசினார். கட்டடப்படும் மதில்சுவருக்கு மெக்ஸிகோவிடமிருந்தே நிதி பெறப்படும் என்று கூறிய போது, கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

ஆனால், சென்ற வார இறுதியில் டொனால்ட் டிரம்பு ட்விட்டரில் தெரிவித்த கருத்து அவர் அளித்த வாக்குறுதிக்கு எதிர்மறையாக இருக்கிறது.

”மிகவும் அவசரமாக தேவைப்படும் மதில்சுவருக்கு, எதேனும் ஒரு வகையில் பின்னாளில் இறுதியாக மெக்ஸிகோ பணம் செலுத்தும்,” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மதில் சுவர் திட்டத்தை தொடங்க சில நிதிகளை மறுசீரமைக்க டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்திருந்தது. ஆனால், மதில் சுவர் திட்டத்தை நிஜத்தில் சாத்தியமாக்க பில்லியன் கணக்கான டாலர்கள் நிதியை காங்கிரஸ் தேட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? இல்லை

உச்ச நீதிமன்றம்

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் வெளியிட்ட ஒரு பட்டியலிலிருந்து, காலியாக இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று டிரம்ப் உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் டிரம்ப்.

”நான் கேள்விப்பட்ட மிக முக்கியமான விஷயம் ஒன்று அதிகாரிகளை நியமிப்பது அமெரிக்க அதிபர்தான் என்று. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு இதுபோன்ற பெரிய மனிதர்களை நியமிப்பது அதுபோலத்தான்,” என்று கோர்சச்சின் பதவியேற்பு விழாவில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார். ” நான் இதனை மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன். அதுவும் முதல் 100 நாட்களுக்குள் அதனை செய்துவிட்டேன். இது அவ்வளவு எளிதானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்றார்.

வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? நிச்சயமாக.

சுகாதார காப்பீட்டு திட்டம்

”சுகாதார காப்பீட்டு திட்டம் இவ்வளவு சிக்கலானதாக இருக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை.”

அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் ஒரு கட்டத்தில், ஒபாமா கேர் என்று அறியப்பட்ட ஜனநாயக சுகாதார சீர்த்திருத்த சட்டத்தை தான் பொறுப்பேற்ற முதல் நாளில் ரத்து செய்வேன் என்று உறுதியளித்திருந்தார்.

மார்ச் மாத இறுதியில், அதாவது டிரம்ப் பதவியேற்று 64 நாட்கள் ஆன நிலையில், சுகாதாரத் திட்டத்துக்காக புதிய மசோதாவைக் கொண்டுவரும் குடியரசுக் கட்சியின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதுபற்றி டிரம்ப் சமூக ஊடகத்தில் சீற்றத்துடன் கருத்துக்களை பதிவு செய்தார்.

”64 நாட்களுக்குள் இத்திட்டத்தை ரத்து செய்வேன் என்றோ, மாற்றுவேன் என்றோ நான் கூறியதில்லை,” என்றார். ”எனக்கு நீண்ட நேரம் இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல சுகாதார காப்பீட்டு திட்டம் மற்றும் கட்டணம் வேண்டும் என்று விரும்புகிறேன். நிச்சயம் அது நடக்கும். அது தொலைத்தூரத்தில் இல்லை.”

அன்றிலிருந்து ஒரு புதிய ஒப்பந்தம் பரீசிலனையில் இருப்பதாக ஊகங்கள் இருந்து வந்தன. ஆனால், கூர்ந்து கவனித்தோம் என்றால் அத்தகையை வதந்திகள் காணாமல் போய்விடுகின்றன.

வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? நிச்சயமாக இல்லை.

குடியேற்றம்

குடியேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை பொறுத்தவரை டொனால்ட் டிரம்ப் கலவையான முடிவுகளை எடுத்துள்ளார். ஆனால், முயற்சி எடுக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்கா குடியேறிகள் திட்டத்தை குறைப்பதற்கும் மற்றும் சிறியளவிலான பெரும்பான்மை முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய குடிமக்களைத் தடுக்கவும் டிரம்ப் நிர்வாகம் இருமுறை நடவடிக்கையில் இறங்கியது. ஆனால், டிரம்ப் பிறப்பித்த முதன்மை உத்தரவுகள் ஒரு சில நீதிபதிகளால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிபர் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க – மெக்ஸிகோ எல்லை மதில் சுவர் குறித்த எதிர்கால அச்சம் நிலவி வந்தததை காட்டும் விளக்கப்படம்.

தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா அதிபர் டிரம்ப் ?அமெரிக்கா முழுவதும் குடியேற்ற விதிகளை கடுமையாக அமலாக்கும் நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்திருந்தார். வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்று முதல் மாதத்தில் குடியேற்றம் தொடர்பான கைதுகள் 32.6% ஆக அதிகரித்திருந்தன.சமீப ஆண்டுகளில், போதிய ஆவணமின்றி அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கை குறைந்த போதும், தன்னுடைய பிரசாரங்களின் போது குடியேற்றம் தொடர்பான கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.

வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? ஹவாய் மற்றும் பெரு நிலப்பரப்பில் உள்ள நீதிபதிகள் முயற்சி செய்த போதிலும் டிரம்பின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளியுறவு கொள்கை

தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் வெளியுறவு கொள்கை குறித்த பார்வை என்பது முரண்பாடுகளின் தொகுப்பாகவும் பல நேரங்களில் சர்ச்சைக்குரிய பரிந்துரைகளின் தொகுப்பாகவுமே இருந்து வந்துள்ளது.

இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் குழுவின் மீது கடுமையான நடவடிக்கை, இரான் மற்றும் சீனா ஆகியன மீது கடுமையான நிலைப்பாடு, இஸ்ரேல் உடனான கூட்டணியையும், ரஷ்யாவுடன் இணக்காமான உறவையும் உறுதிப்படுத்துவது ஆகியவற்றை வேட்பாளர் என்ற முறையில் வெளிப்படுத்தினார்.

டி பி பி எனப்படும் டிரான்ஸ் பசிஃபிக் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய டிரம்ப், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த நடைமுறையை மீளாய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளார்.

சீனா என்று வரும்போது, டிரம்ப் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறார்.

சீனா தனது கரன்ஸி மதிப்பை செயற்கையாக உயர்த்திக்காட்டும் நாடு என்று முத்திரை குத்தி அதிகமான இறக்குமதி வரிகளை விதிப்பேன் என்று டிரம்ப் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளார். அதற்குப் பதிலாக, வட கொரியாவை எதிர்கொள்ள சீனாவின் உதவியை எதிர்பார்க்கிறார்.

சிரியாவில் சொந்த மக்கள் மீதே அந்நாட்டு அரசாங்கம் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை தொடர்ந்து, சிரியா படைகள் மீது டிரம்ப் ஏவுகணைத்தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். வேட்பாளர் டிரம்பாக இருந்திருந்தால், அந்த நடவடிக்கை பயனற்றது என்று கூறி நிராகரித்திருப்பார்.

வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? ஆமாம், இல்லை, நிறைவேற்றப்பட்டிருக்கலாம். எது பொருத்தமானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

உள்கட்டமைப்பு, வரி, குழந்தைகள்நலம் …

22 ஆம் தேதி அக்டோபர் மாதம், தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்குமுன், பென்ஸில்வேனியாவில் பேசிய டொனால்ட் டிரம்ப், ”அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்ற 100 நாள் திட்டம்”, `அமெரிக்க வாக்காளர்களுடனான ஓர் உடன்படிக்கை இது’ என்று டிரம்ப் அறிவித்தார்.

ஒபாமா ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் திரும்பப்பெறுவது, உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்காக அதிபர் கையெழுத்திட்டார். ஆனால், இந்த பரந்து விரிந்துள்ள திட்டங்களில் இதெல்லாம் எளிதில் கிடைக்கக்கூடிய வெற்றியாக புதிய அதிபருக்கு பார்க்கப்படுகிறது.

ஹாரி ட்ரூமேன் காலத்திலிருந்து எந்த அதிபரும் இதுவரை இல்லாத அளவில் இந்த தருணத்தில் அதிக சட்டங்களில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை பெருமைப்படுகிறது.

முதல் 100 நாட்களில் ஒபாமா அதிபராக இருந்தபோது, அவரை விட அதிபர் டிரம்ப் அதிக முதன்மை செயலாணைகளை பிறப்பித்துள்ளதை காட்டும் விளக்கப்படம்.

வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? யூனிகானிடம் கேட்டுப்பாருங்கள்!

தொனியில் மாற்றம்

பாரம்பரிய அதிபர்களில் இருந்து மாறுபட்டவர் டொனால்ட் டிரம்ப். அதனால், ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களில் அவரது நிர்வாகத் திறமையை பாரம்பரிய முறையில் மதிப்பீடு செய்வது முறையாக இருக்காது. மதில்சுவர், சுகாதார காப்பீடு, வரி குறித்து டிரம்ப் வழங்கிய வாக்குறுதிகளுக்காக அவரது வாக்காளர்கள் டிரம்பிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அவருடைய அணுகுமுறைக்காகவும், அரசியல் அமைப்புமுறையை மாற்றப் போவதாகச் சொன்ன வாக்குறுதிகளுக்ககவும் தான் வாக்களித்துள்ளார்கள்.டொனால்ட் டிரம்ப்

தன்னுடைய சர்ச்சைக்குரிய ட்வீட்களாலும், முன் கூட்டியே தயார் செய்யப்படாத பேச்சுக்களாலும் தேசியளவிலான உரையாடல்களில் தொடர்ந்து ஆளுமை செலுத்தி வருகிறார். பாரம்பரிய அரசியல் விதிமுறைகளையும் மற்றும் அதன் தரத்தையும் அவரது நடவடிக்கைகள் மீறிவிட்டன. வெளிநாட்டு தலைவர்களுக்கே சொற்பொழிவாற்றியுள்ள அவர், பெரிய நிறுவனங்களை மிரட்டி தனக்கு சாதகமில்லாத ஊடகங்களை தாக்கிப் பேசியுள்ளார்.

இதுவரை, அவருடைய அர்ப்பணிப்பான ஆதரவாளர்கள், அவருக்கு கவர்ந்திழுக்கும் சக்தி இருப்பதாகவே நம்புகிறார்கள். சமீபத்திய கணிப்புப்படி, நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் டிரம்புக்கு வாக்களித்த 96% வாக்காளர்கள் இன்னும்

தங்கள் `தலைவனுக்கு’ ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]