டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் போன்றவைகள் நமது மூளைக்கு தேவையானவை. நீங்க இதையையே ஒரு லைட்டான கறி டிஷ் செய்ய நினைத்தால் தேங்காய் தண்ணீர் போதுமானது.

ஆனால் ரிச் டேஸ்ட் கறிக்கு கண்டிப்பாக 400 மில்லி தேங்காய் பால் மற்றும் 100 மில்லி தண்ணீர் தேவைப்படும். இந்த ரெசிபியை நீங்க எந்த வகையான ஒயிட் பிஷ் களிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் 1-2

பச்சை மிளகாய் (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்)

1 கூடு பூண்டு

1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது

1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன்

1 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்

2 நறுக்கிய வெங்காயம்

500 மில்லி தேங்காய் தண்ணீர்

ஷெஸ்ட்(லெமன் தோல்) மற்றும் ஒரு எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்

பிஷ் சாஸ் 1/2 டேபிள் ஸ்பூன்

பிரவுன் சுகர் 500 கிராம்

தோலை நீக்கிய ஹேக் மீன் (காட் மீனின் ஒரு வகை), சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வழுவழுவென்று அரைக்க கொஞ்சம் வெஜிடபிள் ஆயிலை தெளித்து தெளித்து அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை சூடேற்றி வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள், பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

தேங்காய் தண்ணீர், லெமன் ஜெஸ்ட்(zest), பிஷ் சாஸ் மற்றும் சுகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் .

இப்பொழுது அதனுடன் வெட்டிய மீன்கள் மற்றும் லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் மீன் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும் .

வெதுவெதுப்பான சூட்டில் மீன்களை மட்டும் எடுத்து 4 பெளல்களில் நடுவே பிரித்து வைத்து தேங்காய் கிரேவியை சுற்றி ஊற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். கடைசியாக பச்சை பட்டாணியை சுற்றிலும் வைத்து அலங்கரியுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]