டேக் இட் ஈஸி பாலிசியில் டாப்ஸி

டாப்ஸிஇணைய தளங்களில் நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிட்டால் அவர்களை நெட்டிஸன்கள் நக்கலடிப்பதும், கலாய்ப்பதும் சகஜமாகி வருகிறது. சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் படத்தை வெளியிட்டார் டாப்ஸி. அவரை கடுமையாக விமர்சித்தனர். அதற்கு அவரும் சூடான பதில் அளித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்தி நடிகர் ரன்பீர்கபூர், நடிகை மஹிரா கான் இருவரும் திருட்டு தம் அடித்துக்கொண்டிருந்த படம் வெளியானது. மஹிரா கான் முதுகை முழுவதுமாக பளிச்சென காட்டும் கிக்கான உடை அணிந்திருந்தார்.

அதைப் பார்த்ததும் சும்மா விடுவார்களா? சரமாரியாக நெட்டிஸன்கள் கமென்ட் வெளியிட்டனர். அதுபற்றி ரன்பீர், மஹிரா கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர்களை நெட்டிஸன்கள் கலாய்த்ததை கண்டு டாப்ஸிக்கு கடும் கோபம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு சிரித்தமுகத்துடன் பதில் அளித்தார்.

‘எனது 2 படங்களை (டூ பீஸ் நீச்சல் உடை ஸ்டில்) நெட்டில் வெளியிட்டேன். அதற்கே என்னை சும்மா விட்டுவைக்கவில்லை, காய்ச்சி எடுத்துவிட்டார்கள். ரன்பீர், மஹிராவை மட்டும் விட்டு வைத்துவிடுவார்களா என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு டென்ஷனாகி பதில் அளிப்பதை விட ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு நகர்வதுதான் சரி என்று நினைக்கிறேன். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற காமெடிபோல் சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்றார் டாப்ஸி.