டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 140 வயது -Universal Tamil

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 140 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு

அங்கீகரிக்கப்பட்ட முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1877-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் திகதி இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. மார்ச் 19 வரை நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்களில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இதனை சிறப்பிக்கும் விதமாக பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றியும் வெளியிட்டு கவுரவித்துள்ளது.

பந்து வீச்சாளர் பந்து வீசுவது போலவும், பேட்ஸ்மேன் அதனை அடிப்பது போலவும், பீல்டர்கள் அதனை தடுக்க முயல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டூடுல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]