டெல்லியில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு

டெல்லியில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தி வருகின்ற நிலையில், அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி எல்லையில் அதிரப்படையினர் விவசாயிகளை டெல்லிக்குள் புகாத வண்ணம் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர்.

இதன்போது விவசாயிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, விவசாயிகள் கலைந்து செல்வதற்காக பொலிஸ் தரப்பில் தண்ணீர் வீச்சு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதோடு, அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.

உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பதற்றம் டெல்லியில் பதற்றம் டெல்லியில் பதற்றம் டெல்லியில் பதற்றம் டெல்லியில் பதற்றம் டெல்லியில் பதற்றம் டெல்லியில் பதற்றம்

டெல்லியில் பதற்றம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]