டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொதுவைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 ஆயிரம் பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]